காணாமல் போன முதலமைச்சர் சமோசா..விசாரணை..!
ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வாங்கிய ஹோட்டலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவர்களுக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமோசா காணாமல் போனது பற்றி சிஐடி போலீசார் சிறப்பு விசாரணை நடத்தி அண்மையில் உயர் அதிகாரிகளிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையில் சிம்லாவில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் இருந்த போலீசார் மூன்று பெட்டிகளில் சமோசாக்களை வாங்கி வந்து அங்கிருந்த அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
முதலமைச்சருக்கு முன்பாகவே சிஐடி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அனைவரும் சமோசாக்களை சாப்பிட்டு விட்டதாகவும் இதன் காரணமாகவே முதலமைச்சருக்கு சமோசாக்களை பரிமாற முடியவில்லை எனவும் சிஐடி சிறப்பு குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஹிமாச்சல் பிரதேச மாநில அமைச்சருக்காக வாங்கிய சமோசா மாயமானது குறித்து சி.ஐ.டி போலீசார் விலகு விசாரணை நடத்தியது குறித்து பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக இளைஞரணி சார்பில் சிம்லாவில் சமோசா பேரணி நடத்தப்பட்டது.
அப்பொழுது முதலமைச்சர் உருவப்படத்திற்கு பாஜகவினர் சமோசா ஊட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் முதலமைச்சரின் வீட்டிற்கு சமோசா பார்சல்களை அனுப்பி வருகின்றனர்.






