--- --:--:-- --

பதக்கங்களை பெற்ற துப்பறியும் மோப்ப நாய் உயிரிழப்பு..!

4

திருச்சி மத்தியில் சிறப்பாக பணியாற்றி பல பதக்கங்களை பெற்ற துப்பறியும் நாய் உயிரிழந்த நிலையில் அதனை அரசு மரியாதையுடன் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் காவல்துறையினர் அடக்கம் செய்தனர்.

 

2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்த வினோ வயது மூப்பின் காரணமாக தனது 13வது வயதில் காலமானது. சிறந்த மோப்ப நாய் பலமுறை பட்டங்களை வென்ற வினோ சிறை கைதிகள் பதிக்க வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை சோதனையின் பொழுது பலமுறை மோப்பம் பிடித்து கண்டுபிடித்துள்ளது.

 

இதனையடுத்து அந்த நாய் நேற்று உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் 15 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon