--- --:--:-- --

காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் குண்டு வீச்சு..!

9

துரையில் காதலிக்க சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் மண்ணெணெய் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் அனுப்பானடி வடிவேலன் தெருவில் வசிக்கும் மாணவி ஒருவரை மணிரத்தினம் என்ற இளைஞர் காதலித்துள்ளார்.

 

ஆனால் மாணவி அதனை ஏற்க மறுத்துள்ளார். மணிரத்தினத்திற்கும் மாணவியின் குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக மணிரத்தினம் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ரத்தினம் மாணவியை பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறியுள்ளார்.

 

மாணவி தொடர்ச்சியாக மறுத்து வரவே ஆத்திரமடைந்த ரத்தினம் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் வீட்டில் மண்ணென்னெய் கொண்டு வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினம் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon