--- --:--:-- --

பவரை நான் எடுத்துக் கொள்வேன்.. பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..!

2

ந்திர மாநில உள்துறை அமைச்சர் தனது கடமையை சரியாக செயலாற்றா விட்டால் அவரது பொறுப்பை தான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என பொதுக்கூட்டத்தில் பேசியவர் ஆந்திராவில் அமைதியும் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் கையாளுவது போல எங்கும் சட்ட ஒழுங்கை கையாள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உள்துறை அமைச்சர் பொறுப்பை கேட்கவோ அல்லது எடுக்கவும் முடியாது என்பது அல்ல என தெரிவித்த பவன் கல்யாண் தான் மக்களுக்கு வித்தியாசமான முறையில் செயலாற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

 

ஆந்திராவில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பவன் கல்யாண் இவ்வாறு பேசியுள்ளார்.

 

Right Menu Icon