--- --:--:-- --

வேறொரு நபரை மணமுடித்த காதலி.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்..!

5

பெங்களூரைச் சேர்ந்த கங்காதரும் அவரது மனைவி பூஜாவும் தங்கள் உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கார்பருக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து பெங்களூருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தில் ஏறி உள்ளனர்.

 

அப்பொழுது பேருந்தில் இருந்த மற்றொரு நபருக்கும் கங்காதரருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்து அருகில் இருந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் கங்காதாரரை குத்திவிட்டு தப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த பூஜா சக பயணிகளின் உதவியுடன் கங்காதரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கங்காதரை கொன்ற நபர் காவல் நிலையத்தில் சரணடந்துள்ளார். அவருடன் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கங்காதரை கொலை செய்தவர் 35 வயதான நபர் என்பது தெரிய வந்தது.

 

இவரும் பூஜாவும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி பிரீத்தனுடன் பூஜா வசிக்க தொடங்கியுள்ளார். அப்பொழுதுதான் பிரித்துவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது பூஜாவுக்கு தெரியவந்துள்ளது. கோபம் அடைந்தவர் அவரை பிரிந்து ஓராண்டுக்கு முன் பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

 

பெங்களூருவில் வேலை செய்து வந்த பூஜா தன்னுடன் பணியாற்றி வந்த கங்காதரை காதலித்து 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மீண்டும் ஊருக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் பெங்களூரு பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த பொழுது கங்காதரனை கத்தியால் குத்தியுள்ளான். பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon