--- --:--:-- --

ரசிகர்களுடன் இணைந்து கௌதம் மேனன், கீர்த்தி சுரேஷ் செம குத்தாட்டம்..!

13

மிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசியாக ஏ.ஆர்.ரகுமானின் கச்சேரி நடந்தது, ஆனால் இந்நிகழ்ச்சி பெரிய பிரச்சனைகளுடன் முடிந்தது.

 

எனவே அப்படிபட்ட பிரச்சனைகள் எதுவும் வந்துவிட கூடாது என்பதற்காக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது என்று கூறப்பட்டது, ஆனால் வேறு காரணமும் இருக்கலாம்.விஜய் ஆண்டனி இனி தான் அதிகம் இசையமைப்பிலும் இசைக் கச்சேரியிலும் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக் கச்சேரி கோலாகலமாக எல்லாவித பாதுகாப்புடன் நடந்துள்ளது.
அவரின் இசைக் கச்சேரியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.
அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon