--- --:--:-- --

நெசவு தொழிலாளியின் மகள் கேங் வுமன் பணிக்கு சேர்ந்து அசத்தல்!

8

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நெசவு தொழிலாளியின் மகள் மின்வாரியத்தில் பணிக்கு சேர்ந்த அசத்தியுள்ளார். ஓமலூர் அருகே சரக்குபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி கந்தசாமி.

 

இவரது மகள் சவுமியா ஐடிஐ படித்து விட்டு கேங்க் வுமன் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்கான தகுதித்தேர்வு மேட்டூரில் நடைபெற்றது. 250 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த தேர்வில் 9 நிமிடம் 11 வினாடிகளில் மின்கம்பத்தில் ஏறி சௌமியா அசத்தினார்.

 

இதேபோல் மின் சாதனத்தை சுமந்து செல்லுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தை விட குறைந்த நேரத்தில் முடித்து தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் ஓமலூர் பகுதியில் இருந்து முதன்முறையாக கேங்க் வுமன் பணிக்கு தேர்ச்சிபெற்று சாதித்த சௌமியாவை கிராம மக்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon