--- --:--:-- --

3வதாக பிறந்த பெண் குழந்தை விற்ற தந்தை..!

5

ந்திராவில் 2 மாத குழந்தையை விற்ற புகாரில் தந்தை உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். எ குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் – ராணி தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக 2 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இதனால் விரக்தியடைந்த ராஜேஷ் இடைத்தரகர்கள் மூலம் வேறொருவருக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையைப் விற்றுள்ளார். குழந்தையை காணாது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

 

பின்னர் குழந்தையை காணவில்லை என்றும் ராஜேஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கேரளாவில் விற்கப்பட்ட குழந்தை அடுத்தடுத்து 7 பேரிடம் கைமாறி ஹைதராபாத்தில் இருப்பது தெரியவந்ததை அடுத்து ஹைதராபாத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர்.

 

Right Menu Icon