--- --:--:-- --

தன்னுயிர் கொடுத்து தங்கையை காப்பாற்றிய அண்ணன்..!

7

ர்மபுரி அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தன் தங்கையை காப்பாற்ற அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது 14 வயது மகள் மகனுடன் ஒகேனக்கலுக்கு சென்றுள்ளார்.

 

ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து அவர்கள் பின்னர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ராஜ்குமாரின் மகள் ஆழமான பகுதியில் சென்று தண்ணீரில் தத்தளித்த பார்த்து அவரது அண்ணன் ஆற்றில் குதித்து தங்கையை காப்பாற்றியுள்ளார்.

 

ஆனால் அவரால் வெளியே வர முடியாமல் உறவினர்கள் கண் முன்னே மூழ்கியுள்ளான். உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தங்கையை காப்பாற்ற தன் உயிரை கொடுத்த அண்ணனின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon