சேலம் அருகே பயங்கர சத்தத்துடன் நில அதிர்வா..?
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திடீரென நில அதிர்வு சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்தி எழுந்த நிலையில் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆய்வு செய்யும் அதிகாரிகள் கவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நிலநடுக்கத்திற்கான பதிவுகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த பகுதியில் 3 விமானங்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதியில் ஏற்பட்ட மர்ம சத்தம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





