--- --:--:-- --

போதையில் வகுப்பறையிலேயே தூங்கிய ஆசிரியர்.!

3

தெலுங்கானா மாநிலம் அரசு ஆரம்பப் பள்ளி வகுப்பறையில் முழு போதையில் இருந்ததாக சொல்லப்படும் ஆசிரியர் இருந்த வீடியோ வெளியாகி உள்ளது. மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள சிட்டப்போ கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

 

இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சசிகாந்த் என்ற ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சசிகாந்த் பணிக்கு வந்த நாள் முதல் தினமும் குடித்துவிட்டு பள்ளியில் வந்து தூங்குவதாக கூறப்படுகிறது.

 

கடந்த 6 மாதங்களாக இதே நிலை நீடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் நேற்று அங்கு சென்ற கிராம இளைஞர் ஒருவர் போதையில் தூங்கி கொண்டிருந்த ஆசிரியரை தட்டி எழுப்பி கேள்வி எழுப்பினார்.

 

வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் போதை ஆசிரியரை பணி நீக்கம் செய்து வேறொரு பேராசிரியரை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon