--- --:--:-- --

16 ஆவது நிதிக்குழு உடனான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை..!

10

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று 16 ஆவது நிதிக்குழு உடனான ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மத்திய அரசின் 16ஆவது நிதிக்குழுவினர் 4 நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளனர். நிதி குழுவில் உள்ளவர்கள் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நிதி பகிர்வு தொடர்பான ஆலேசானைகள் நடத்தி பரிந்துரை வழங்குவார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குழுவினர் மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவார்கள்.

 

அதன்படி 16வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரிய தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தமிழவம் வந்த 16வது நிதி குழுவினரை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு முதல்வர் சார்பில் நினைவு பரிசு மற்றும் இரவு விருந்து வழங்கப்பட்டது.

 

இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் உடன் 16வது நிதிக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். 16ஆவது நிதிக்குழு ஆலோசனையில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய வரி பகிர்வு மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசியலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.

 

எனவே மத்திய வருவாயில் மாநிலங்களின் வரி வருவாயின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு 50 விழுக்காடு பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட முடியும்.

 

எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளை பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் பரிந்துரைத்து, மாநில அரசுகளுக்கான 50% உறுதி செய்துவிடும் என்று நான் நம்புகிறேன். சமச்சீரான அணுகுமுறைகளுக்கு முறை தேவைப்படுகிறது.

Right Menu Icon