நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடு வட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





