சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
நீதிமன்ற உத்தரவை அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் செய்த முறையீட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.





