--- --:--:-- --

பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்..!

20

பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ் பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள் அவர்கள் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என கூறினார்.

 

இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது . இணையில் ராம்தேவ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தனது கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இது குறித்து மகாராஷ்டிரா மகளிர் ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பெண்களை அவமரியாதை செய்ய தனக்கு துணிவு இல்லை என்றும் சமூக ஊடகங்களில் பரப்பும் வீடியோ முழுமையானது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon