டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு -பொதுமக்கள் அவதி
தீபாவளி பண்டிகையான நேற்றும், நேற்று முன்தினமும் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.இது தலைநகரின் காற்று மாசுபாட்டு மீண்டும் அதிகரித்தது. தலைநகரில் உள்ள 38 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 31-ல் காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியிருந்தது கண்டறியப்பட்டது.
காலையில் 339 ஆக இருந்த மாசுபாடு அளவு (ஏ.கியூ.ஐ), நண்பகலில் 334 ஆகவும் இருந்தது. அதேநேரம் ஆனந்த் விகார்(402), வாசிர்பூர்(423), அசோக் விகார்(414) ஆகிய 3 மையங்களில் மிகவும் மோசமான அளவை எட்டி இருந்தது. இது வரும் நாட்களில் மேலும் மோசமடையக்கூடும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





