--- --:--:-- --

நடிகை மும்தாஜ் கொடுமை செய்வதாக பெண் அளித்த புகார்..!

13

டிகை மும்தாஜ் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கொண்டாடப்பட்ட பிரபலம். மோனிஷா என் மோனாலிசா, குஷி போன்ற படங்களில் முக்கிய பங்கு வகித்திருப்பார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ள மும்தாஜ் கடந்த 7, 8 வருடங்களாக சினிமா பக்கமே காணவில்லை.

 

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு நான் இருக்கிறேன் என்பதை மட்டும் தான் அடையாளப்படுத்தினார். நடிகை மும்தாஜ் தனது அண்ணன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.அவர்கள் வீட்டில் 19 வயது இளம் பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் காவல் நிலையத்திற்கு போன் செய்து மும்தாஜ் வீட்டில் கொடுமை செய்வதாகவும் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

உடனே போலீசார் மும்தாஜ் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தி அந்த பெண் மற்றும் அவரது சகோதரியையும் அவர்களது மாநில போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது நடிகை மும்தாஜ் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon