--- --:--:-- --

பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜயின் படப்பிடிப்பு

3=

பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜய்யின் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அப்பள்ளிக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

சென்னை பூந்தமல்லியில் உள்ள விக்டோரியா நினைவு பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜய் நடிப்பில் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது பார்வையற்ற மாணவர்கள் மத்தியில் புகை பிடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் படப்பிடிப்பில் வாகனங்களை இயக்கியதாலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் நடிகர் விஜயின் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக படப்பிடிப்பு நடந்த விக்டோரியா நினைவு பார்வையற்றோர் சிறப்புப் பள்ளி நிர்வாகத்திடம் மாற்றுத்திறனாளி நலத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

முறையான அனுமதியின்றி பார்வையற்றோர் பள்ளியில் படப்பிடிப்பு நடத்தியதாகவும் பார்வையற்ற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்றும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon