--- --:--:-- --

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நெசவுத் தொழிலாளி..!

10

ந்துவட்டி கொடுமையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நெசவுத் தொழிலாளி ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தோட்டம் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். 25 வயதான இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் ஒரு வயது மகனும் உள்ளனர்.

 

இவரின் மனைவி கருவுற்றிருந்த போது வளைகாப்பு நடத்த அதே பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரிடம் நாற்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அப்போது பேப்பரில் கையெழுத்து பெற்றுக் கொண்டதோடு பத்திரம் மற்றும் கையெழுத்திடாத காசோலையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

40 ஆயிரம் ரூபாய் கடனுக்கு இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்த போதிலும் மீண்டும் மிரட்டல் கொடுக்கவே அதிர்ந்து போனார் சுரேஷ். வேறு வழியின்றி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றவர் அதன் முடிவுக்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Right Menu Icon