--- --:--:-- --

தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. நண்பனை குத்தி கொலை செய்த நபர்..!

4

திருப்பூரில் பேச்சிலர் ரூமில் தண்ணீர் யார் பிடிப்பது என்று தகராறு டிரைவரை குத்தி கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி வந்தார்.

 

இவர் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். அதே கடையில் மற்றொரு வாகனத்தின் டிரைவராக பணியாற்றி வரும் காரைக்குடியை சேர்ந்த வசந்த் என்பவரும் ஆனந்தராஜ் உடன் ஒரே அறையில் தங்கி வந்துள்ளனர்.

 

இருவருக்கும் தண்ணீர் பிடித்து வைப்பதில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று இருவரும் மதுபோதையில் இருந்த பொழுது தண்ணீர் பிடிக்காமல் இருந்துள்ளனர். ஆனந்தராஜ் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டிய நிலையில் தண்ணீர் பிடித்து வைக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

ஆத்திரமடைந்த வசந்த் அருகே அறையை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஆனந்தராஜ் கீழே இறங்கி நடந்து வந்த பொழுதும் எதிரே வந்த வசந்த் தான் புதிதாக வாங்கி வந்த கத்தியால் ஆனந்தராஜை குத்தி கொன்றதாக கூறப்படுகிறது.

 

இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து தப்பி சென்றவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon