அதிமுகவில் எப்போதும் இரட்டை தலைமைதான் ..!
அதிமுகவில் எப்போதும் இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஒற்றை தலைமையில் கட்சி செயல்பட பெரும்பான்மையானோர் ஒருமித்தகருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகளும் மாறி மாறி இரண்டு தலைவர்களையும் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அதிமுகவில் எப்போதும் இரட்டை தலைமை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





