பேருந்து சக்கரத்தில் சிக்கி சிதைந்த மாணவன்..!
சேலத்தில் கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சின்ன திருப்பதியில் உள்ள ஜெயராம் கலை கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவன் அப்துல் கலாம் மாலை வீடு திரும்புவதற்காக கல்லூரி பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்து புறப்பட்ட சில வினாடிகளில் கீழே இறங்க முயன்றதாகவும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





