தெரு நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா..!
புதுச்சேரியில் உணவை சாப்பிட முயன்ற தெருநாயின் தலையில் பிளாஸ்டிக் டப்பா சிக்கிக்கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. புதுச்சேரி தஞ்சை நகரில் தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள உணவை உண்ணும் பொழுது அதன் தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்டது.
அதனை வெளியில் எடுக்க முடியாமல் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த பகுதி வாசிகள், பிராணிகள் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி நாய் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் டப்பாவை அகற்றினார்.
தொடர்ந்து நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் அதை காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.





