சென்னையை ஹஜ் பயண புறப்பாட்டிடமாக்க பரிசீலனை..! மு.க ஸ்டாலின் நன்றி
ஹஜ் பயண புறப்பாட்டு இடங்களில் சென்னையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்ததற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் புறப்பாட்டு இடங்கள் பட்டியலில் சென்னையை சேர்க்க பரிசீலிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் உறுதி அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் எந்த சூழலிலும் ஹஜ் பயணம் புறப்பாட்டு இடமாக சென்னை இருப்பதை உறுதி செய்யுமாறும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.





