வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு..!
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஆற்றில் இறங்க கூடாது என விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறிய முண்டியடித்து பெரும்பாலானோர் வைகை ஆற்றில் இறங்கினர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் இறங்க கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கையை மீறி பலர் ஆற்றில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





