--- --:--:-- --

அம்மா பேயாக வந்தார் எனக்கூறி பல நாட்களாக உணவு உண்ணாமல் கிடந்த பெண்கள்..!

8

திருச்சி மணப்பாறை அருகே அம்மா பேயாக வந்துள்ளதாக கூரி பட்டதாரி பெண் உட்பட இரண்டு பெண்கள் பல நாட்களாக உணவு உண்ணாமல் இருந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் பட்டதாரியான மார்கரெட் என்பவரின் தாய் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

 

இதனால் மார்கரெட் அதே பகுதியில் உள்ள தனது சித்தியான ஆரோக்கியமாளுடன் வசித்து வந்தார். இருவரும் மார்கரெட் தாயார் சவரியம்மாள் பேயாக வந்து உள்ளதாக கூறி வீட்டில் இருந்த பொருட்களை வெளியில் வீசியுள்ளனர்.

 

பல ஆண்டுகளாக உணவு உண்ணாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்க உடனடியாக வந்த போலீசார் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேய் இருப்பதாக நம்பி உணவு உண்ணாமல் இருந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon