தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு..!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





