யோகியின் ட்விட்டர் கணக்கை முடக்கி குரங்குப் படத்தை வைத்த ஹேக்கர்கள்..!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலக ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவெற்றி பெற்றதை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் முதலமைச்சரின் அலுவலக கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில் குரங்கின் படம் ப்ரொஃபைல் படமாகவும் வைக்கப்பட்டது. அச்சுறுத்தும் விதமாக டிவீட்களையும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர்.
40 லட்சம் வீரர்களை கொண்ட யோகியின் அலுவலகத்திற்கு இறுதியாக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டது.





