--- --:--:-- --

இன்று முதல் தனியார் மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி..!

1

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் நிலையில் அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா மூன்றாவது அலை வேகமாக பரவ தொடங்கியதையடுத்து பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. இரண்டாவது டோஸ் செலுத்தி ஒன்பது மாதங்கள் பூர்த்தியானவர்கள் பூஸ்டர் டோஸ் எழுதிக்கொள்ள தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் அரசு சார்பில் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் தனியார் மையங்களிலும் 18 வயது நிரம்பியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை குறைத்து உள்ளன.

 

கோவிஷீல்டு 600 ரூபாயாக இருந்த நிலையில் அதனை 225 ரூபாயாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது. இதேபோல் கோவாக்ஸின் விலை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 275 ரூபாயாக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது.

 

Right Menu Icon