--- --:--:-- --

கிணற்றுக்குள் தவறி விழுந்த மான்குட்டி..!

2

கோவை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சூலூர் என்ற கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி விவசாய கிணற்றுக்குள் நேற்று இரண்டு வயது உடைய காட்டு மான் குட்டி விழுந்ததை கண்டு அந்த பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி வலைவீசி பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். வெளிப்புற காயங்கள் எதுவும் ஏற்படாததால் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு கொண்டு சென்றனர்.

 

சம்பவ இடத்திற்கு அருகே வனப் பகுதி எதுவும் இல்லாததால் அந்த மான்குட்டி நீண்ட தூரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து பயணித்து தண்ணீர் தேடி வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Right Menu Icon