மர்மமான முறையில் உயிரிழந்த ஆடுகள்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தன.
இதனையடுத்து சோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் காட்டு மிருகங்கள் கடித்ததால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





