மூதாட்டிக்கு காலனி வாங்கி கொடுத்த தலைமை காவலர்..!
வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டி நிலையறிந்து காலனி வாங்கித்தந்த போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து தாம்பரம் ஆணையர் பாராட்டியுள்ளார்.
பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் வெளியே கடும் வெயிலில் நடந்து வந்த மூதாட்டியை பார்த்துள்ளார். அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதனைக்கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சிறிது நேரத்தில் காலனி வாங்கி வந்து மூதாட்டி அணிவித்துள்ளார். இதற்கு தாம்பரம் காவல் ஆணையர் நேரில் அழைத்து சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இருப்பதாகவும் தொடர்ந்து இதே போன்று செயல்படவும் தெரிவித்துள்ளார்.





