--- --:--:-- --

கரூரில் விநாயகர் சிலைக்காக போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது..!

10

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகரில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் சிலை இருந்த பக்கத்து வீட்டுக்காரர் வேலாயுதம்பாளையம் போலீஸ் மற்றும் புகளூர் தாசில்தாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி புகளூர் தாசில்தார் மதிவாணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர்.

 

இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜக கட்சியினர் விநாயகர் சிலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேலாயுதம்பாளையம் – புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது இங்கிருந்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலையை இருந்த இடத்தில் வைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிட ப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததில் மூதாட்டி ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon