--- --:--:-- --

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!

4

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மனைவியின் தங்கையான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பூசாரி பாளையத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி தனது அக்காவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

 

அக்காவின் கணவரும், ஜேசிபி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வரும் மன்னாத கவுண்டன் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாய் மற்றும் அக்காவிடம் தெரிவித்த நிலையில் சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon