தனி பட்டா மாற்றம் செய்ய 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது..!
திருவாடானை அருகே தனி பட்டா மாற்றம் செய்ய ரூ.3000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சதீஷ். 26 வயதான சதீஷ் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் உள்ள புல்லூர் குரூப்பில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
நாவலூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் தனது பூர்வீக சொத்தில் தனது பாகத்திற்குரிய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் அணுகியுள்ளார். அப்போது மணியை பல முறை அலைகழித்த சதீஷ் இறுதியில் 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டும் சரி செய்வேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் அதர்ச்சியடைந்த மணி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். எனவே, புகாரின் பேரில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. உண்ணிகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ்வரி, குமரேசன் மற்றும் போலீஸார் மணியிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர்.
சம்பவத்தின் போது மறைந்திருந்த போலீஸார் 5 ரூபாய் பணத்தை சதீஷ் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.அவரிடமிருந்து 3000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, கிராம நிர்வாக அலுவலரான சதீஷை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




