15 – 18 வயதுடையோர்களுக்கு கொரோனா தடுப்பூசி..!
15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு வருகிற 3ம் தேதி முதல் கொரொனா தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை அமைச்சர் சுப்பிரமணியன் கவச உடை அணிந்தவாறு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு வருகிற 3ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்றும், தமிழகம் முழுவதும் 33 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மூத்த குடிமக்கள், முன் களப்பணியாளர்கள் என முதலில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





