ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை..!
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
போட்ஸ்வானாவில் சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குனர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் உறுதி செய்யப்பட்ட 19 பேரில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே லேசான காய்ச்சல் விட்ட அதிகாரிகள் தென்பட்டதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து போட்ஸ்வானாவிற்கு வந்தவர்களுக்கு முதன் முதலில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதாகவும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா விமான சேவைகளை ரத்து செய்வதாக தெரிவித்தார்.






