--- --:--:-- --

பாலியல் தொல்லைக்கு சாகும் கடைசி மாணவி நானாக தான் இருக்கனும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை..!

3

பாலியல் தொல்லை காரணமாக கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது பள்ளி மாணவி கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .அவர் எழுதியுள்ள கடிதத்தை கொண்டு போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று வந்த 17 வயது பள்ளி மாணவி நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய போது மாணவி எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

 

பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மாணவி கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்கணும் என அந்த கடிதத்தில் மாணவி எழுதியுள்ளார்.

 

அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon