--- --:--:-- --

உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு..!

6

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

 

வீடு இடிந்து விழுந்ததில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon