ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உயர்நீதிமன்றம்..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜவர்மன் என்பவரை ராஜேந்திரபாலாஜி கொல்ல முயற்சித்ததாக புகார் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக கைது உட்பட கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






