ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேனீர் விருந்து..!
டெல்லியில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேனீர் விருந்து அளிக்கிறார்.
மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம் என முக்கிய துறைகளில் பணி புரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேனீர் விருந்து வழங்கினார்.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மத்திய அரசின் உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் பதவியிலிருக்கும் ரோகிணி ஆகியோர் அதிகாரிகள் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.






