--- --:--:-- --

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்..!

2

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது.

இதனால் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் தேனீர் கடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாத்திரங்களைக் கொண்டு வந்து தேநீர் வாங்கி செல்ல வேண்டும் என்றும் நெகிழிப் பைகளில் தேநீர் வாங்கி செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி அரசு அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்களில் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,

Leave a Reply

Right Menu Icon