கொரொனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்..!
நடிகர் சூர்யா கொரொனாவால் பாதிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கொரொனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் என்றும் அச்சத்துடன் முடக்கிவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம் என்றும் அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றியும் என தெரிவித்துள்ளார்.






