--- --:--:-- --

“தமிழ், சமஸ்கிருதம் இருமொழிகளிலும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்” உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு!!

si

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தலாம் என உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.

 

சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கும்பாபிஷேகம் எந்த மொழியில் நடைபெறும் என்பதில் திடீரென சர்ச்சை எழுந்தது.

 

இதனால்,சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என தரப்பிலும், தமிழில் தான் நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பிலும் என ஏராளமான வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டதால், கும்பாபிஷேகம் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் கும்பா ஷேகம் நடைபெறும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிக்கையாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு கூடியது. அப்போது தமிழக இந்து அறநிலையத் துறை சார்பில், தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்துவதற்கான உறுதி மொழி அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், இரு மொழிகளிலும் கும்பாபஷேகம் நடத்த அனுமதித்து தீர்ப்பு வழங்கினர். தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கோரி தாக்கலான மனுக்களையும் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon