--- --:--:-- --

உள்ளாட்சி மறைமுக தேர்தலில் திமுக – அதிமுக மோதல்.! தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு!!

IMG-20200111-WA0096

விருதுநகர் அருகே நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே மோதல் வெடித்தது. தடுக்க முயன்ற போலீஸ் டிஎஸ்பி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பல இடங்களில் அடிதடி, வன்முறை சம்பவங்களும் அரங்கேறி பதற்றம் உருவாகியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு திமுக,அதிமுக சார்பில் போட்டியிட்ட இருவரும் தலா 5 ஓட்டுகளைப் பெற்றனர்.இதனால் முடிவு அறிவிப்பது தாமதமான நிலையில், அங்கு திடீரென திமுக, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்தது.

 

இதைத் தடுக்க முயன்ற நரிக்குடி போலீஸ் டி.எஸ்.பி வெங்கடேசனை அரிவாள் வெட்டு விழுந்தது .காயமடைந்த டிஎஸ்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இதே போல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் தேர்தலிலும் இரு கட்சியினரிடையே மோதல் வெடித்தது. இதில் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon