--- --:--:-- --

கோலிவுட்டில் கலக்கும் காமெடி சூப்பர் ஸ்டார் யோகிபாபு

6

2019 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடியனாக கலக்கியுள்ளார் யோகிபாபு. காமெடி மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் யோகிபாபு நடித்துள்ளார். வடிவேலு, விவேக், சந்தானத்திற்கு அடுத்தபடியாக தமிழ்சினிமாவில் ஆதர்ச காமெடியனாக உருவெடுத்துள்ளார் யோகிபாபு.

 

பன்னி மூஞ்சி வாயா என்ற காமெடியால் மிகவும் பிரபலமான இந்த நாயகன் எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு என லேடி சூப்பர் ஸ்டார் உடன் டூயட் பாடும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார். வடிவேலு திரை உலகின் உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளில் கிட்டத்தட்ட 2 அல்லது 3 படங்களில் நடிப்பது போன்று யோகிபாபு தற்போதைய காமெடியன்களில் மிகவும் பிசியானவராக மாறியுள்ளார்.

 

2019 ஆம் ஆண்டில் மட்டும் 30க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள யோகிபாபு அதில் சில படங்களில் கதையின் நாயகனாகவும் ஸ்கிரீனில் தோன்றினார். நாலாம் ஹீரோவா என்று சிரித்தபடியே பேட்டி கொடுத்த யோகிபாபு தான் 2019இல் சில படங்களில் நாயகனாக நடித்தார். இந்த படங்களில் யோகிபாபுவின் காமெடி ரசிக்கும் விதத்தில் இருக்கிறது என்பதை தாண்டி அவரை ரசிப்பவர்களின் கூட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 

திரையில் யோகிபாபு முகம் தோன்றினாலே ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைக்கும் இயல்பை கொண்டுள்ளதால் யோகி பாபு கால்ஷீட் கோலிவுட்டில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த வருடத்தின் ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடியனாக யோகிபாபு இந்த ஆண்டு தொடங்குவதற்கு உள்ளேயே பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon