--- --:--:-- --

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய கனிமொழி..! மு.க.ஸ்டாலின் வாழ்த்து ..!!

IMG-20200105-WA0083

திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கனிமொழி, இன்று தனது 52-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழிக்கு இன்று 52-வது பிறந்த நாள்.ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளன்று தனது தந்தை கருணாநிதியிடம் ஆசி பெறுவது வழக்கம்.

 

கருணாநிதிமறைவையடுத்து, கடந்தாண்டு தனது பிறந்த நாளை கொண்டாடுவதை தவிர்த்தார். இந்த ஆண்டும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மாணவர்களும், பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம், என இரு நாட்களுக்கு முன் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்ற கனிமொழி, மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். கனிமொழிக்கு பொன்னாடை வழங்கி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon