முதல்வர் விஜய் தலைமையில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்..!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் இன்று, முதலமைசச்ர் விஜய் தலைமையில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி பிரச்சனையை கூற வந்த நபரை, துறையூர் தொகுதியின் எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதே போல கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதும் புகார் எழுந்துள்ளது.
இச்சூழ்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள InterContinental Resortல் இன்று காலை 11 மணிக்கு தவெக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என முதல்வரும் மூத்த கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைகள் வழங்குவார்கள் எனத் தெரிகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பின்பு, அங்கிருந்து புறப்பட்டு நீலாங்கரை இல்லத்துக்கு முதல்வர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டின் நீர்நிலைகளைப் புனரமைப்பதில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், ‘ஏரி’ என்ற புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




