--- --:--:-- --

சந்திரயான்-2 விண்கலம் பற்றி பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்

10

சந்திரயான்-2 விண்கலம் பற்றிய தகவல்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒலி ஒளிபரப்பு மற்றும் ஆண்டு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ஊடகங்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

 

சந்திரயான்-2 விண்கலம் பற்றி ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon