--- --:--:-- --

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

1

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ. 100 கோடி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர்.

 

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார். அப்போது, காவல் துறை தரப்பில், குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை. இது ஒரு நிதி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு; 400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது; அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கினால் உண்மைகள் எதுவும் வெளிவராது; அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் உள்ளது; முத்துக்குமாரை மகேஷ் தான் பாதுகாக்கிறார் என வாதிடப்பட்டது.

அன்பில் மகேஷ் தரப்பில் விசாரணைக்காக ஒரு நாள் முழுவதும் ஆஜராகி, முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்; ஏழு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை சமர்ப்பித்துள்ளேன்; மீண்டும் விசாரணைக்கு ஆஜராக தயார்; கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னையில் வைத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon